இலங்கைத் தீவு வாழ் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்!

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கையின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதவி ஏற்றுக் கொண்டமை தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கலம் மக்ரே அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்த மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டமை கடும் வருத்தத்தை தரக்கூடிய செய்தியாக அமைந்துள்ளது என அவர் டுவிட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.

இந்த நியமனம் இலங்கைத் தீவு வாழ் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால சமாதானத்திற்கும், மனித உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்காலத்தில் தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து கலம் மக்ரே விவரணமொன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers