மைத்திரியின் மற்றுமொரு அதிரடி! அரச நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்

Report Print Vethu Vethu in அரசியல்

அனைத்து அரச ஊடக நிறுவனங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது.

புதிய அரசாங்கத்தின் கீழ் ஊடக அமைச்சர் ஒருவரை நியமிக்கும் வரை, இந்த செயற்பாட்டினை ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ளார்.

நேற்று இரவு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கருத்திற்கு கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ளதாக செய்தி வெளியாகியதனை தொடர்ந்து அரசாங்க ஊடக நிறுவனங்களில் குழப்ப நிலை ஏற்பட்டது.

அங்கு பணியாற்றிய மஹிந்தவுக்கு நெருக்கமானவர்கள் ஊடக நிறுவனங்களின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில், ITN நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரும் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மஹிந்தவுக்கு நெருக்கமான வெளி நபர்கள் சிலரும் அரச ஊடகங்களுக்குள் நுழைந்தமையால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்த குழுவினர் வன்முறையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers