ரணிலின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர்! அதிரடியாக தடை விதித்த ஜனாதிபதி

Report Print Shalini in அரசியல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை அடுத்து நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை சபாநாயகர் அனுமதித்த போதும், ஜனாதிபதி அதற்கு தடை விதித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் ஆராய நாளை உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜெயசூரியவுக்கு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் கருஜெயசூரிய தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அதிரடியாக ஒத்திவைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவடைந்து விட்டதாகவம், மூன்றாவது கூட்டம் எதிர்வரும் 16ஆம் திகதியே நடைபெறும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திங்கட் கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதாக சபாநாயகர் தெரிவித்திருந்த போதும் ஜனாதிபதி தலையிட்டு அதை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers