ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
"நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கின்றது. நாடாளுமன்றத்தை சபாநாயகரினால் கூட்ட முடியாது.
நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமைக்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இன்று வெளியிட உள்ளார்.
ரணில் விக்ரமசிங்க எப்படியான முயற்சிகளை முன்னெடுத்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியாது" எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.