மஹிந்த ஜனாதிபதியாகவும் ஆகலாம்: சீமான் ஆரூடம்

Report Print Shalini in அரசியல்

இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தமது தரப்பு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் மட்டுமல்லாது உலகளவிலும் இந்த விடயம் பரபரப்பாக பேசப்படுகின்றது.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் இது பற்றி கூறும்போது,

“இது அவர்களுக்குள்ளான அரசியல் விளையாட்டு. இதில் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் வரப்போவதில்லை.

முன்பு இருந்ததை விட மிக மோசமான சூழல், பின்னடைவுதான் அங்கு நமக்கு நிலவுகிறதே தவிர ஒரு மாற்றமும் வரப்போவதில்லை.

ராஜபக்சே இப்போது பிரதமராகி உள்ளார் என்பதைவிட அடுத்த தேர்தலில் அவர் அதிபராகக்கூட ஆக்கப்படுவார். இதில் ஆச்சர்யமோ வியப்போ இல்லை எனக்கூறினார்.