எந்த மாற்றமும் இல்லை! சுமந்திரன் தெரிவித்துள்ள விடயம்

Report Print Sujitha Sri in அரசியல்

தேசிய அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்ற கொள்கையில் மாற்றமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

இந்த விடயத்தை அவர் இந்திய ஊடமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென்ற எமது கொள்கையில் மாற்றமில்லை. புதிய பிரதமர் நியமனம் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகியமை என்பன தேசிய அரசாங்கம் என்ற எண்ணத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்.

தேசிய அரசாங்கம் தொடர வேண்டும் என்பதே தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றில் நடத்தப்படவுள்ளதாக கூறப்படும் வாக்கெடுப்பில் கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்கும் என்ற கேள்விக்கு நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்க்க, 2 கட்சிகளும் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டும் என்ற எமது கொள்கைகயின் அடிப்படையில் நாம் செயற்படுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers