மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்க காரணம் என்ன? தொண்டமான் வெளியிட்ட தகவல்

Report Print Shalini in அரசியல்

நாட்டில் தற்போது ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பிரதி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராகிய பின் மஹிந்த அணி நடத்தும் முதல் ஊடக சந்திப்பு இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெறுகின்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் மிகவும் தேவையான ஒன்றே.

இந்த புதிய கூட்டணிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பூரண ஆதரவை வழங்கும். மலையகத்தில் உள்ள ஏனைய சிறு கட்சிகளும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.

தற்போது மலையக மக்கள் 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை கேட்டு போராடுகின்றார்கள்.

இந்த நிலையில், புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்ற பின் இது தொடர்பில் அவரை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். இதில் மலையக மக்களின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கு என அவர்கள் உறுதியளித்துள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.