இலங்கையின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்குள் நடைபெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பினரும் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அனுகூலமாக முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

வன்முறைகளை தவிர்க்குமாறும், வழமையான நடைமுறைகளுக்கு அமைய செயற்படுமாறும், அரசியலமைப்பு ரீதியான நிறுவனங்கள் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மட்டுமல்லாது ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உள்ளடங்கிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.