ஜனாதிபதியின் தேவைக்கு ஐ.தே.கட்சி ஒத்துழைக்கவில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

பொலிஸ் மா அதிபரை நீக்கும் தேவை ஜனாதிபதிக்கு இருந்த போதிலும் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு, டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர், “ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக ஜனாதிபதிக்கு பல தகவல்கள் கிடைத்தன.

அவற்றை தற்போது வெளியிட முடியாது. இவை தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், ஜனாதிபதிக்கும் அச்சமும் அதிருப்தியும் ஏற்பட்டிருக்க கூடும்.

இருந்த நல்லாட்சி அரசாங்கத்தை விட, நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது” எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...