பதவி விலகத் தயார்! தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய ரணில்

Report Print Vethu Vethu in அரசியல்

தான் இன்னமும் இலங்கையின் சட்டரீதியான பிரதமர் என, பதவி நீக்கப்பட்டதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றால் மாத்திரம் பதவி விலகுவதற்கு தயார் என அவர் கூறியுள்ளார்.

உங்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்பு ரீதியிலானதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முன்னாள் பிரதமர், தான் இன்னமும் சட்டரீதியான பிரதமர் தான். அரசியல் யாப்புக்கு அமைய பெரும்பான்மையினை நாடாளுமன்றில் நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியை கைவிட்டு செல்ல தயார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers