மஹிந்தவை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார் சீனத் தூதுவர்!

Report Print Rakesh in அரசியல்

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை, சீனத் தூதுவர் சென் யுவான் இன்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் போது, சீன அரசின் வாழ்த்துச் செய்தியை அவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

நேற்றிரவு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலாவது வெளிநாட்டுத் தூதுவர் இவராவார்.

மஹிந்த ஆட்சியின்போது சீனாவானது இலங்கையில் ஆழமாக காலூன்றுவதற்கு முயற்சித்தது. நாட்டின் முக்கிய இடங்கள் சீனாவுக்கு வழங்கப்பட்டன என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.