இலங்கை தொடர்பில் உரிய அவதானம்- சுவிஸ் தூதரகம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் நாடாளுமன்றம் நவம்பர் 16ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டமை மற்றும் ஏனைய அரசியல் சம்பவங்கள் தொடர்பில் உன்னிப்பான அவதானத்தை செலுத்துவதாக சுவிட்ஸர்லாந்தின் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலமைப்பை உரியமுறையில் பின்பற்றுமாறும், ஜனநாயகப்பண்புகளை கடைப்பிடிக்குமாறும் ஊடக சுதந்திரத்தை மதிக்குமாறும் சுவிஷ்; தூதரகம் கோரியுள்ளது.

இதேவேளை பலாத்காரத்தை பயன்படுத்துவதில் அனைத்து தரப்பும் விலகியிருக்கவேண்டும் என்றும் சுவிஸ் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.