த.ம.வி.பு கட்சி அலுவலகத்திற்கு முன்பாக வெடி கொழுத்திய மகிந்தவின் ஆதரவாளர்கள்

Report Print Kumar in அரசியல்

மகிந்த ராஜபக்ஸ பிரதமராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு பல்வேறு பகுதிகளிலும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர்களின் ஆதரவாளர்களினால் பட்டாசு வெடிக்கப்பட்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பட்டாசுகள் கொழுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்திற்கு முன்பாகவும் வெடி கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்க விடயமாகும்.