யாழில் மஹிந்த ஆதரவாளர்கள் வெடிகொழுத்தி கொண்டாட்டம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

யாழில் உள்ள பிரதான வீதிகள் ஊடாக, வாகனத்தில் மஹிந்த ராஜபக்ஸவின் பாரிய பாதகை ஒன்று கட்டப்பட்டு வாகன தொடரணியாக சென்ற ஆதவாளர்கள் முக்கிய சந்திகளில் வெடி கொழுத்தி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் வெடிகளை கொழுத்தி முக்கிய சந்திகளில் ஆதவாளர்கள் ஆர்ப்பரித்ததனால் வீதியில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டதுடன் வீதியால் சென்றவர்களும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

வெடி கொழுத்தி கொண்டாடியவர்களுக்கு அங்கிருக்கும் தனியார் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் பலர் ஆதரவளித்துள்ளனர்.

மேலதிக தகவல் - சுமி

Latest Offers