நாளை காலை அமைச்சரவையை கூட்டுகின்றார் ரணில்

Report Print Jeslin Jeslin in அரசியல்

பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க நாளை அலரி மாளிகையில் போட்டி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் அமைச்சரவையில் இருக்கிறது என்று, ஐ.தே.க பேச்சாளர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்தார்.

அதேவேளை, பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கான பாதுகாப்பை நீக்குமாறும், அவரது வாகன அணியை விலக்கிக் கொள்ளுமாறும் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தாம் பிரதமர் செயலகத்தை இயக்கி வருவதாகவும், ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்படும் போது அவர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறுவார் என்றும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers