அதிரடியாக பதவியேற்ற மஹிந்தவுக்கு பெரும்பான்மை ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றம்!

Report Print Nivetha in அரசியல்

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற பிரேரணை ஒன்றினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிறைவேற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இந்த பிரேரணையை நிறைவேற்றியுள்ளனர்.

இந்த பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.