அமைச்சரவை சற்றுமுன்னர் கலைப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கையின் அமைச்சரவை சற்றுமுன்னர் கலைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26ம் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முந்தைய அமைச்சரவையும் தற்சமயம் கலைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், அரசியலமைப்பு சபை மற்றும் அரச வங்கிகளின் தலைவர்கள் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்