மஹிந்தவின் புதிய செயலாளருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறிய நாமல்!

Report Print Nivetha in அரசியல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் புதிய செயலாளர் சிறிசேன அமரசேகரவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 51(1) உறுப்புரையின் அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதியால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமரின் புதிய செயலாளருக்கு நாமல் ராஜபக்ச அவரின் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமரின் செயலாளராக இருந்த ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.