மைத்திரியின் உண்மை முகம் அம்பலம்! ராஜபக்சவின் இந்திய பயணத்தின் பின்னணியில் நடந்தது என்ன?

Report Print Nivetha in அரசியல்

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வண்மையாக கண்டித்துள்ளார்.

இது குறித்து இந்திய ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இனப்படுகொலை செய்த ராஜபக்ச பிரதமராகி இருப்பது பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை.

இலங்கை அரசியலில் நிகழ்ந்துள்ள மாற்றம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்ச பிரதமராகியிருக்கிறார், இலங்கை அரசியலில் இந்திய அரசின் தலையீடு தான் இந்த அரசியல் மாற்றத்திற்குக் காரணம்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ராஜபக்ச பதவியேற்றிருப்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...