மகிந்தவின் மீள் வருகை ஆச்சரியமானதல்ல! புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர்

Report Print Nesan Nesan in அரசியல்

மகிந்தவின் மீள் வருகை ஆச்சரியமானதல்ல என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மீள் வருகை தொடர்பாக இன்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் விடுத்துள்ள ஊடக அறிக்கைலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

மகிந்தவின் மீள் வருகை ஆச்சரியமானதல்ல இதன் சாத்தியத்தை நாம் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம். எமது மக்களுக்கு இந்த மாற்றம் மூலம் எதுவும் ஆக போவதில்லை என்கிற தெளிவு கடந்த 10 வருடங்களில் எமக்கு அனுபவம் மூலம் ஏற்பட்டது.

ஆகவே, நாம் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கிறோம். மக்கள் மத்தியில் நாம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாக வருவதற்கான ஒரு முயர்ச்சினையே முன்னெடுத்து வருகிறோம்.

இன்று மக்களை ஏமாற்றி சுயநல அரசியல் செய்யும் தமிழ் தலைமைகளை வெளியேற்றும் தார்மீக கடமையினை முன்னெடுக்கிறோம். என அக்கட்சியின் ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers