இலங்கை தமிழர்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்! அமெரிக்கா செல்லும் வழியில் வலியுறுத்திச் சென்ற தமிழிசை

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கையில் தமிழர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள தனியார் அமைப்பு, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதை வழங்க உள்ளது.

இதற்காக அமெரிக்கா புறப்பட்டபோது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.

மருத்துவம், சமூகம், சவாலான சூழ்நிலையில் பணியாற்றும் தலைவர் என்ற அடிப்படையில், இந்த விருதுக்கு தான் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், எந்தவிதத்திலும் தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது எனவும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers