மீண்டும் பாதுகாப்பு செயலாளராகிறார் கோத்தா! அடுத்தவாரம் பதவியேற்பு

Report Print Ajith Ajith in அரசியல்

புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவர் அடுத்த வாரம் தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போதைய பாதுகாப்புச் செயலாளராக கபில வைத்தியரத்ன செயற்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பதவிக்கு கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்றைய தினம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.