ஒரே இரவில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்த மஹிந்த!

Report Print Nivetha in அரசியல்

ஒரே இரவில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உன்னிப்பாக கவனம் செலுத்திவருவதாக அறிவித்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பு சட்டங்களின் பிரகாரம் அனைத்து கட்சிகளும் செயற்படல் வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, வன்முறைகளைத் தவிர்த்து, உரிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும், இலங்கையின் அரசியல் மாற்றங்களை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரித்தானியாவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers