மைத்திரியின் அதிரடி அறிவிப்பால் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை!

Report Print Nivetha in அரசியல்

இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதியின் இந்த அதிரடி நடவடிக்கை நாட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியதை அடுத்துதான் இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியை நோக்கியுள்ளதாகவும் நியூயோர்க் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்தியாவின் அரசியல்வாதிகள் சிலரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்து கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.