மஹிந்தவுக்கு பதவி வழங்கும் போது ரணில் எங்கிருந்தார்?

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையின் 22வது பிரதமராக மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் போதே, எந்தவித முன்னறிப்பும் இன்றி புதிய பிரதமரை ஜனாதிபதி தெரிவு செய்திருந்தார்.

இரவு நேரத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது, ரணில் விக்ரமசிங்க இலங்கையில் இருந்துள்ளார்.

அவர் காலியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமராக கலந்து கொண்டிருந்தார். எனினும் அதிரடி மாற்றம் குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான தகவல் அறிந்ததும் உடனடியாக அலரி மாளிகைக்கு வந்த ரணில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி கொலை முயற்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை காரணமாக சமகாலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் இணைந்த புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.

Latest Offers