அன்றைய எனது ஆசனத்தில் இன்று மைத்திரி! எனினும் இணைந்து செயற்பட தயார்! மஹிந்த

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித இடையூறும் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட்டிருக்கின்றேன். நான் அன்று அமர்ந்திருந்த ஆசனத்திலேயே இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமர்ந்துள்ளார்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வேன் என தெரிவித்துள்ளார்.