ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

2015ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை காட்டிக்கொடுத்தமைக்கு எதிராக நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தெரியவருகிறது.

நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுக் குழு நேற்று கூடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வர மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மாதுளுவாவே சோபித தேரர் உயிருடன் இருக்கும் போதும், அன்னாரது இறுதிச் சடங்கின் போதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்வதாக பகிரங்கமாக வாக்குறுதியளித்த, சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாக பதவிக்கு வரும் கனவில் துரோகத்தனமான தீர்மானத்தை எடுத்துள்ளதாக நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு கூறியுள்ளது.

தன்னை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சோபித தேரரின் உடலை அகௌரவப்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த செயலுக்கு எதிரான நடவடிக்கைகளை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வது எனவும் நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers