ரணிலின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு கடிதம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

பிரதமரின் பாதுகாப்பினையும் சிறப்புரிமைகளையும் உறுதி செய்யுமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம், பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

அந்தக் கடிதம் வருமாறு,

கௌரவ கரு ஜயசூரிய,

சபாநாயகர்,

நாடாளுமன்றம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாத்தல்

இலங்கை நாடாளுமன்றின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவே வகித்து வருகின்றார்.

அரசியல் அமைப்பின் 42(4) சரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்புரிமைகளை அதேவிதமாக பேணிப் பாதுகாப்பதனை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

ஐ.தே.க தவிசாளர் (கபீர் ஹாசீம்)

ஐ.தே.க. செயலாளர்(அகில விராஜ் காரியவசம்)

Latest Offers