நாட்டின் சட்டத்தை மீறிய மைத்திரி!

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த 2015ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது வைத்திருந்த நம்பிக்கை இல்லாமல் போனதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனை மக்களுக்கு வெளிப்படுத்தாது இதுவரை மௌனம் காத்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது இது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது.

நாட்டின் மீண்டும் வன்முறை கலாசாரம் ஆரம்பித்துள்ளது. நாட்டின் சட்டத்தை ஜனாதிபதியே மீறியுள்ளார் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய தேசிய அரசாங்கத்தில் இருந்து ஒரு தரப்பு விலகியதும் புதிய பிரதமரை நியமிக்கவோ அமைச்சரவையை கலைக்கவோ ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை.

இதனடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கவும் அமைச்சரவையை கலைக்கவும் ஜனாதிபதிக்கு முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன,

ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்ட போது பிரதமராக நியமிக்கப்படவில்லை. 2015ஆம் ஆண்டு ஜனவரி ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதனால், ஜனாதிபதியால் பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பின்னர் செப்டம்பர் 2ஆம் திகதி தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஒரு தரப்பு விலகினால், செப்டம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் எந்த நிலைமை காணப்பட்டதோ அதே நிலைமைக்கு மாறும் எனக் கூறியுள்ளார்.

Latest Offers