தமிழ் முற்போக்கு கூட்டணியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தும் மகிந்த தரப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மகிந்த ராஜபக்சவுக்கு பெற்றுக்கொள்ள நோக்கில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியில் ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இந்த கூட்டணியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார், ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், தேசிய தொழிலாளர் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலக்கராஜ் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் மகிந்த தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த விடயத்தை தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் அறிந்திருக்கவில்லை எனவும் பேசப்படுகிறது.

அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நேற்று கருத்து வெளியிட்ட பழனி திகாம்பரம் தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியை ஆதரிக்கும் எனக் கூறியிருந்தார்.

அதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.

Latest Offers