மகிந்த - மைத்திரிக்கு எதிராக ஆவேசப்படும் பிரபலமான பெண்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை கொன்று ஆறடியில் புதைக்கவிருந்தார் என்று கூறிய மனிதனின் கைகளை பிடித்து கொள்ள முடியுமானால், என்ன ஆண்மைத்தனம் என தான் கேள்வி எழுப்புவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார். ஜனாதிபதியை விட பெண்ணான எமக்கு முதுகெலும்பு இருக்கின்றது.

அன்றும் நாங்கள் மகிந்த ராஜபக்ச திருடன் என்றுக் கூறினோம். இன்று மகிந்த ராஜபக்ச திருடன் என்றே நாங்கள் கூறுவோம். நாங்கள் இன்று எதிர்நோக்கும் இந்த வேதனை குறுகிய காலமே.

ஐக்கிய தேசியக்கட்சியின் அனைவரும் தமக்கு இடையிலான பேதங்களை மறந்து, கேடயங்களாக பிரதமரை சுற்றி நிற்க வேண்டும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, படித்த,நல்ல குடும்பத்தில் இருந்து வந்த மதிக்கத்தக்க மனிதர்.

இதன் காரணமாக மக்கள் தற்போதும் அவருடன் இருக்கின்றனர். ஜனாதிபதி தற்போது கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செய்த இந்த மோசமான வேலை என்ன என்று நான் கேள்வி எழுப்புகிறேன் என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers