இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இந்தியா இதுவரை காத்து வந்த மௌனத்தை கலைத்து தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
அரசியல் அமைப்பிற்கு மதிப்பளிக்குமாறு இலங்கையின் அரசியல் அதிகாரத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அதிகாரத்தில் இருக்கும் தரப்பினர் அரசியல் அமைப்பு பொறிமுறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
“இலங்கையின் அண்மைக்கால நிலவரங்கள் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. ஜனநாயக நாடு மற்றும் நேச நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் ஜனநாயக பெறுமதிகள் மற்றும் அரசியல் அமைப்பு செயன்முறைகள் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
இலங்கையின் நட்பு மக்களுக்கு தொடர்ச்சியாக அபிவிருத்தி உதவிகள் வழங்கப்படும்.” என அறக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.