நாடாளுமன்றின் பெரும்பான்மை பலத்தை 16ம் திகதி நிரூபிப்போம்!

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்றின் பெரும்பான்மை பலத்தை எதிர்வரும் 16ம் திகதி நிரூபிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப பொதுச் செயலாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றின் பெரும்பான்மை பலம் மகிந்த ராஜபக்சவிற்கு கிடைக்கும். எதிர்வரும் 16ம் திகதி இதனை நிரூபிக்க முடியும்.

இதனால் ரணில் விக்ரமசிங்க கௌரவமான முறையில் அலரி மாளிகையைவிட்டு வெளியேறிச் செல்ல வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு தற்பொழுது எதிர்க்கட்சி ஆசனமே பொருத்தமான ஆசனம் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Latest Offers