நாடாளுமன்றில் பிரச்சினையை தீர்த்துக் கொள்வோம்: நிமால் சிறிபால

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்றில் பிரச்சினையை தீர்த்துக்கொள்வோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்ரமசிங்க சொல்கின்றார் தனக்கு பலம் உள்ளது என, நாம் கூறுகின்றோம் எமக்கு பலம் உண்டு என யாரும் பதற்றம் அடைய வேண்டியதில்லை.

நாடாளுமன்றம் எந்த நாளும் மூடப்பட்டிருக்காது. நாடாளுமன்றம் திறக்கப்படும் நாளில் பிரச்சினைய தீர்த்துக் கொள்வோம். நாடாளுமன்றில் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்.

நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் நல்ல அரசாங்கம் ஒன்றை அமைப்போம். எனவே வன்முறைகளிலோ அல்லது அச்சுறுத்தல் விடுத்தலிலோ எவரும் ஈடுபட வேண்டாம்.

மேலும் எவரினதும் மனித உரிமைகள், தொழில் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.