பலவந்தமான அரசியல் கொள்ளையடிப்பில் ஈடுபட முயற்சி: சுஜீவ சேனசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

பலவந்தமாக ஆட்சியை கைப்பற்றி, அமைச்சரவையை நியமித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுப்பதற்காகவே நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எமக்கு நாடாளுமன்றத்தில் 115 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றது.

நாடாளுமன்றத்தின் ஒத்திவைப்பு காலத்தை நீடித்து சகல சட்டத்திட்டங்களையும் பயன்படுத்தி அரசியல் கொள்ளையடிப்பில் ஈடுபட முயற்சித்து வருகின்றனர். பலவந்தமாக கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நாங்களே தற்போதும் ஆட்சியில் இருக்கின்றோம் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாங்கள் ஜனநாயக ரீதியான செயற்பட்டு வந்தோம்.

சரத் பொன்சேகாவுக்கு 19 பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், கோத்தபாய ராஜபக்சவுக்கு 70 பாதுகாப்பு அதிகாரிகளை வழங்கிய அரசாங்கம் எமது அரசாங்கம்.

நாங்கள் ஜனநாயகவாதிகள். அவர்கள் ஜனநாயக பயங்கரவாதிகள். ஜனநாயகவாதிகள் என்றால் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers