மகிந்த அணிக்கு தாவிய மேலும் இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

Report Print Murali Murali in அரசியல்

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்தகுமாரும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையக மக்கள் முன்னணி கட்சியின் நிர்வாக குழு கூட்டம் இன்று கொழும்பில் இடம்பெற்ற போது, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, வேலுசாமி இராதாகிருஷ்ணனுக்கு அமைச்சரவையில் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers