நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் அணித்திரள வேண்டும்! ருவான் விஜேவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் பொலிஸாரும் முப்படையினரும், நாட்டின் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள பிரத்தியேக காணொளியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸாரும் முப்படையினரும் கட்சி, வர்ண பேதங்களை பாராது நாட்டின் சட்டத்தையும் ஜனநாயகதக்தை பாதுகாக்க வேண்டும். நாட்டு மக்களும் ஜனநாயகத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியா, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்பது இங்கு பிரச்சினையல்ல, நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் சட்டம் காலில் மிதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நாம் எதனை எதிர்பார்க்க முடியும்.

நாட்டில் ஆட்சிக்கு வரும் எந்த ஆட்சியாளராக இருந்தாலும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கியெறிய முடியும் கிழித்தெறிய முடியும். சட்டத்திற்கு விரோதமான முறையில் செயற்பட முடியும்.

இப்படியான இலங்கையா எமக்கு தேவைப்படுகிறது. நாட்டின் ஜனநாயகத்தை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். எமது அரசியலமைப்புச் சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க நாட்டின் பிரஜைகள் என்ற முறையில் நாம் அனைவரும் அணித்திரள வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தையும் நாட்டை பாதுகாக்க நாம் அனைவரும் கைகோர்த்து கொள்ள வேண்டும் எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers