மகிந்தவிடம் சென்றவர்கள் திரும்பி வருவார்கள்! லக்ஷ்மன் கிரியெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க சென்ற அனைவரும் திரும்பி வருவார்கள் எனவும் சிலர் வாழ்த்துவதற்காக மட்டுமே சென்றதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க பலர் தயாராக இருக்கின்றனரா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடாக இருப்பதாகவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers