நாடாளுமன்றை கூட்டுமாறு சம்பந்தன் அவசர கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு நாடாளுமன்றினை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் சாசனத்தின் மேலாதிக்கத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டமைந்த நாடாளுமன்றின் மேலாதிக்கத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றினை கூட்டுவதன் மூலம் சட்டம் ஒழுங்கினை உறுதி செய்ய முடியும் எனவும் அதனால் துரித கதியில் நாடாளுமன்றை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

Latest Offers