தமிழர்களின் அதிமுக்கிய விடயத்தை கையிலெடுக்கும் நாமல் எம்.பி

Report Print Dias Dias in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் நாளைய தினம் கொழும்பில் உள்ள மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

குறித்த சிறைச்சாலைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கெனவே குறித்த சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து காத்திரமான நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்காக நாளைய இந்த சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இணைந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாமல் ராஜபக்ச தலைமையில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், இதற்கு பொறுப்புக்கூறவேண்டிய நிலையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளது என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.

Latest Offers