மஹிந்த அதிகாரத்திற்கு வந்ததும் ஆட்டத்தை ஆரம்பித்த நாமல்!

Report Print Vethu Vethu in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றைய தினம் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு சென்ற விதம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவிற்கமைய அவர் இன்று நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு சென்றதாக விசாரணை பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் தந்தை பிரதமராகிய இரண்டு நாட்களில் குட்டையான காற்சட்டை அணிந்து நாமல் விசாரணை பிரிவிற்கு சென்றுள்ளார்.

அரச நிறுவனம் ஒன்றிற்கு செல்வதற்கு சில வழிமுறைகள் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நாமல் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

குற்ற விசாரணை பிரிவு நாமல் மீது சுமத்தியுள்ள வழக்கிற்கமைய, நீதிமன்ற உத்தரவை மதித்து, தினமும் நிதி குற்ற விசாரணை பிரிவில் தன்னை பதிவு செய்து வருகிறார்.

கடந்த வருடங்கள் முழுவதும், உடற்பயிற்சியின் பின்னர் இந்த முறையிலேயே நாமல் விசாரணை பிரிவுகளுக்கு சென்றுள்ளார் என நாமலின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான விமர்சனங்களை தாம் தலை குனிந்து ஏற்றுக்கொள்வதாகவும், நியாயமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Latest Offers