ரணில் உயிருக்கு அச்சுறுத்தல்! முற்றிலும் பாதுகாப்பினை மட்டுப்படுத்திய மைத்திரி

Report Print Sinan in அரசியல்

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இது போலவே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஒரு நிலை ஏற்பட்ட போது 70 இராணுவம் வழங்கப்பட்டது.

இதேவேளை, இலங்கையில் மூன்று தடவைகள் பிரதமராக இருந்த ரணிலுக்கு பலமான பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பினை குறைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு, 10 பாதுகாப்பு அதிகாரிகளாக (MSD) குறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers