அரச இணையத்தளம் முற்றிலும் மாற்றம்! தூக்கி எறியப்பட்டார் ரணில்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றம் சர்வதேசத்தின் கவனத்தை முழுதுமாக இலங்கையின்பால் திருப்பியுள்ளது.

கடந்த 26ஆம் திகதி யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றிருந்தார். அத்துடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் பிரமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே.க தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகிந்த ராஜபக்ச பதவியேற்றவுடன் அவரது டுவிட்டர் தளத்தில் உடனடியாக இலங்கையின் பிரதமர் என மாற்றப்பட்டது.

இந்நிலையில், தற்போது பிரதம அமைச்சரின் உத்தியோகப்பூர்வ அரச இணையத்தளத்திலும் முற்றிலுமாக மகிந்த ராஜபக்சவின் பெயர் உட்புகுத்தப்பட்டுள்ளது.

Latest Offers