சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு அவசர எச்சரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமைகள், மனித உரிமைகளை விபத்துக்கு உள்ளாக்கிவிடக்கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் உலக விவகாரங்களுக்கான சிரேஸ்ட பணிப்பாளர் மினார் பிம்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முக்கிய உரிமைகள் மதிக்கப்படுவதனையும் பாதுகாக்கப்படுவதனையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் கருத்துக்களை வெளியிடவும், சுதந்திரமாக ஒன்றுகூடவும், அமைதியான முறையில் இணைந்து செயற்படவும் அனுமதி அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அரசாங்கக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஊடக நிறுவனங்களில் சில ஊடகவியலாளர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஊடகவியலாளர்களும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் தங்களது கடமைகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு அதிகாரிகளுக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers