தென்னிலங்கையை பதற வைத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து நாமலின் அறிவிப்பு

Report Print Nivetha in அரசியல்

அதிரடி அரசியல் மாற்றத்திற்கு மத்தியில் தென்னிலங்கையில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் கொழும்பு தெமட்டகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மிகவும் துயரமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

துப்பாக்கி சூட்டியில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers