அலரி மாளிகையை விட்டு வெளியேறும் ரணில்? ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்பும் சாகல

Report Print Gokulan Gokulan in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மேலும் அரசியலமைப்புக்கேற்ப சட்டரீதியாக பிரதமராக தெரிவு செய்யப்பட்டவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். எனினும் தற்போது அரசியலமைப்புக்கு முரணான வகையில் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் அவருக்குள்ளது. அதனை எம்மால் இன்று நிரூபிக்க முடியும். அதற்கு பயந்துதான் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் சாகல ரத்னாயக்க சுட்டிக்காட்டினார்.

Latest Offers