மைத்திரி, டிரம்ப், ஒபாமா... முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு கொலை மிரட்டல்! சதி திட்டம் தீட்டுவது யார்?

Report Print Nivetha in அரசியல்

உலக நாடுகளில் உள்ள சில முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்ய மிரட்டல் விடுக்கப்படுவது தற்போது புதிய வழக்கமாகியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல முக்கிய தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு பின்புலம் யார் என்ற கேள்வி எழ ஆரம்பித்துள்ளது. இது உலக நாடுகளை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

அமெரிக்காவில் முதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கிளிண்டன் வீட்டில் கிடைத்த வெடிகுண்டுதான்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் வசித்து வரும் நியூயார்க் புறநகர் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுகளை யார் வைத்தது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்த அதிர்ச்சி முடியும் முன் அதே நாளில் இன்னொரு சம்பவம் நடந்தது.

அதே நாளில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வீட்டிற்கு வெடி பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதை அனுப்பியதும் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் கடந்த வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பயன்படுத்தி வரும் ஐபோனில் இருந்து சீனா தகவல்களை ஹேக் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

சீனா அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலக உரையாடல்களை திருடி இருப்பதாக இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஐபோனில் இருக்கும் சில பாகங்கள் சீனாவில் தயாரானது. அவரை கொலை செய்வதற்காக சீனா செயல்படுவதாக அமெரிக்க பத்திரிக்கைகளும் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டு பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்தியாவின் உளவு அமைப்பான ரோ அமைப்பு, இலங்கை ஜனாதிபதியை கொல்ல திட்டமிட்டது என்ற குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டன.

இந்த அனைத்து சம்பவங்களும் கடந்த ஒரே வாரத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதற்கு எல்லாம் பின்னணியில் யார் இருக்கின்றார்கள். இவ்வாறான அச்சுறுத்தலுக்கு யார் பொறுப்பு என்பதை தீவிரமாக கண்டுப்பிடிக்க வேண்டிய சூழலில் ஒவ்வொறு நாடும் இருக்கின்றது என்பது உண்மை.

Latest Offers