மகிந்தவின் திடீர் பிரதமர் அவதாரம்! பின்னணியில் சர்வதேசம்?

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கையில் நடக்கும் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள், ஆசியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில்,

இலங்கையில் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு பின் சீனா இருப்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக அறிவித்துள்ளார்.

இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரணில் விக்ரமசிங்க அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சீனா ஆதரவாளர்

ரணில் விக்ரமசிங்க பிரதமர் மோடிக்கு நெருக்கமானார். அரசியல் சார்ந்து மட்டுமில்லாமல் தனிப்பட்ட விடயங்களிலும் இவர்கள் நல்ல நண்பர்கள். இந்த நிலையில் மோடிக்கு அவ்வளவு நெருக்கம் இல்லாத ராஜபக்ச இலங்கையின் பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார். இவர் ஒரு சீனா ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா உள்ளதா?

இது முழுக்க முழுக்க சீனா செய்த அதிரடி என்கிறார்கள். தன்னுடைய ஆதரவாளரை மீண்டும் அங்கு முக்கிய பொறுப்பில் பதவி ஏற்க வைக்க பல நாட்களாக சீனா திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்காக சீனாவின் எம்.எஸ்.எஸ் (Ministry of State Security -MSS) எனப்படும் உளவுப்படை பின்பிருந்து இயங்கியதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு பிரச்சினை

இது இந்தியாவிற்கு பெரிய தலைவலியை தந்து உள்ளது. இந்தியா ஆசியாவில் வைத்திருக்கும் குறைந்தபட்ச அழுத்தமும், ஆதிக்கமும் கூட கையைவிட்டு போக போகிறது என்று பலர் எச்சரிக்கை விடுகிறார்கள். முக்கியாக இது இந்தியாவிலும் பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

ஆசியாவில் என்ன நடக்கும்

இது ஆசியா அரசியலை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஆசியாவில் உள்ள இரண்டு முக்கிய நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் பெரிய நட்பு நாடுகள் ஆகிவிட்டன. இந்தியா ரஷ்யாவுடன் நட்பில் இருந்தாலும் பெரிய அளவில் நெருக்கம் காட்டுவதில்லை. இதனால் சீனா ஆசியாவின் ''பெரிய அண்னணாக'' மாற போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Latest Offers