அலரி மாளிகைக்கான நீர் மற்றும் மின்சார வசதிகள் துண்டிப்பு?

Report Print Kamel Kamel in அரசியல்

அலரி மாளிகைக்கான நீர் விநியோகம் மற்றும் மின்சார இணைப்பு என்பன துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரை அலரி மாளிகையை விட்டு வெளியேற்றும் நோக்கில் இவ்வாறு மின்சாரம் மற்றும் நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.

எவ்வாறெனினும், இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 10 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.