ஜனாதிபதி மைத்திரி வெளிநாட்டு ராஜதந்திரிகளை இன்று சந்திக்கின்றார்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளை இன்றைய தினம் சந்திக்க உள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ராஜதந்திர ரீதியில் அதிகாரிகளை தெளிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பினை நடத்த உள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பிரதமரும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தனித் தனித்தனியாக சில ராஜதந்திரிகளை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers